Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
George / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வளலாயில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமது காணிகளை துப்பரவு செய்து, அதனை அளவீடு செய்யும் நடவடிக்கைகளில் காணி உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.
கடந்த 25 வருடகாலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலி. கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட வளலாய் ஜேஃ284 கிராம சேவையாளர் பிரிவில் 232 ஏக்கர் காணியில் கடந்த மாதம் 13ஆம் திகதி மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டனர்.
அதனை அடுத்து, அப்பிரதேச மக்கள் தமது காணிகளை துப்பரவு செய்து வந்தனர். தற்போது துப்பரவு செய்யப்பட்ட தமது காணிகளை அளவிட்டு தமது காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, தமது காணிகளை தனியார் நில அளவையாளர்கள் மூலமே தாம் அளவீடு செய்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
43 minute ago
47 minute ago