2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

உல்லாச தளமாக மாறும் அக்கரை

Sudharshini   / 2015 ஏப்ரல் 19 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

யாழ். வலி, கிழக்குப் பிரதேச சபைக்குட்பட்ட வளலாய் அக்கரைப் கடற்கரையை உல்லாச கடற்கரையாக மாற்றுவதுக்கான முதற்கட்ட பணிகள் 1 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வளலாய் அக்கரைப் கடற்கரை பகுதி கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் மக்கள் மீளக்குடியேறினர்.

கடற்கரையை அண்டிய பகுதிகளில் சவுக்குமரம் வளர்த்தல், ஓய்வுக் குடில்கள் அமைத்தல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தல், மின்சார வசதிகள் ஏற்படுத்தல், இருக்கைகள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்காக முதற்கட்டமாக 1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து கட்டம் கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

உல்லாசக் கடற்கரையாக மாற்றும் செயற்றிட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நேரில் சென்று சனிக்கிழமை (18) பார்வையிட்டார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .