Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Kogilavani / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட வட்டக்கச்சி மற்றும் ஸ்கந்தபுரம் சந்தைகளை புனரமைப்புச் செய்வதற்காக உலக வங்கியின் நெல்சிப் திட்டத்தில் வழங்கப்பட்ட நிதி திரும்பிச் செல்லும் அபாயம் இருப்பதாக கரைச்சி பிரதேச சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இரண்டு சந்தைகளையும் புனரமைப்புச் செய்வதற்காக தலா 5 மில்லியன் ரூபாய் நிதி கரைச்சி பிரதேச சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஒருவருடம் கடந்த நிலையிலும் சபை நிர்வாகத்தின் வினைத்திறனின்மையால் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
இரண்டு சந்தைகளின் புனரமைப்புப் பணிகளையும் பிரதேச மட்ட மக்கள் அமைப்புக்கள் ஊடாக செய்யுமாறு கோரியும் அதற்கு தவிசாளர் மறுத்துள்ளார். ஒப்பந்தகாரர்கள் மூலம் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கிராமமட்ட அமைப்புகளுக்கு 2 மில்லியனுக்கு மேல் ஒப்பந்த பணிகளை வழங்க முடியாது எனவும் தெரிவித்து வருகின்றார்.
இறுதியாக வந்த 2012 ஆம் ஆண்டு முதலாம் இலக்க நிதி சுற்றுநிரூபத்துக்கு அமைவாக சிறந்த செயற்பாடுகளை கொண்ட கிராமமட்ட அமைப்புகளுக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் 5 மில்லியன் ரூபாய் வரை ஒப்பந்த பணிகளை வழங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ள போதும் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அசமந்த போக்கும் வினைதிறனற்ற நடவடிக்கையும் காரணமாக இதுவரைக்கும் குறித்த நிதியை மக்கள் நலன் கருதி பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
4 hours ago