2025 ஜூலை 10, வியாழக்கிழமை

விவசாயக் கல்லூரிக்கு விரிவுரையாளர்களை நியமிக்குமாறு மகஜர்

Thipaan   / 2015 மே 03 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா விவசாயக் கல்லூரிக்கு தமிழ் மொழிமூல விரிவுரையாளர்களை நியமிக்குமாறு கோரி விவசாயக் கல்லூரி மாணவர்கள், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனிடம் சனிக்கிழமை (02) மகஜர் கையளித்தனர். 

விவசாய கல்லூரியில் தமிழ்மொழி மூலமான விரிவுரையாளர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது. 

விரிவுரையாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி மகஜர் கையளிக்கப்பட்டது. 

விவசாயக் கல்லூரியில் தமிழ் மொழி மூலமான விரிவுரையாளர்களுக்கான 14 வெற்றிடங்கள் இருக்கும் நிலையில் தற்போது 3 வெற்றிடங்களே நிரப்பப்பட்டுள்ளன.

இதனால் சீரான கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை தொடர்வதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

மகஜரைக் கையளித்த பின்னர் விவசாய அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், மத்திய அரசாங்கத்துடன் பேசி உரிய நடவடிக்கைளை முன்னெடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
 
இலங்கையில் காணப்படும் ஐந்து விவசாய கல்லூரிகளில் வடமாகாணத்தின் வவுனியாவில் இருக்கும் கல்லூரி ஒன்றே தமிழ் மொழி மூலமான விவசாய கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .