2025 ஜூலை 10, வியாழக்கிழமை

முச்சக்கரவண்டி - வான் விபத்து

Princiya Dixci   / 2015 மே 04 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியை பின்னால் சென்றுகொண்டிருந்த வான் முட்டி மோதி விபத்துக்குள்ளாக்கியதில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம், தென்மராட்சி மறவன்புலவு சந்தியில் ஞாயிற்றுக்கிழமை (03) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

 முன்னால் பயணித்த முச்சக்கரவண்டி மறவன்புலவு சந்தியில் திரும்புவதற்கு முற்பட்ட போதே பின்னால் வந்துகொண்டிருந்த வான், வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியில் மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .