2025 ஜூலை 10, வியாழக்கிழமை

மின்சார வயர் அறுந்து விழுந்ததில் தந்தையும் மகனும் பலி

Thipaan   / 2015 மே 04 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ் .சுன்னாகம் ஐயனார் கோவிலடி வெள்ளை வாய்க்கால் ஒழுங்கையில் திங்கட்கிழமை (04) மின்சார வயர் அறுந்து வீழ்ந்ததில் தந்தையும் மகனும் பலியாகியுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். 

இடியுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்த போது மின்சார வயர் அறுந்து துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த தந்தை, மகன் ஆகியோர் மீது வீழ்ந்துள்ளது. 

மின்சாரத்தை நிறுத்துமாறு மின்சார சபைக்கு அறிவித்த போதும் 45 நிமிடங்களுக்கு பின்னரே மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. 

இதனையடுத்து இருவரது சடலங்களும் மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .