2025 ஜூலை 09, புதன்கிழமை

வடமாகாணசபையின் புதிய உறுப்பினர் பதவியேற்றார்

Menaka Mookandi   / 2015 மே 06 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

மறைந்த முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் வீரபாகு கனகசுந்தரத்துக்கு பதிலாக நியமிக்கப்பட்ட புதிய வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவனேசன் புதன்கிழமை (06) தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் முன்னிலையில் இவர் சத்தியப்பிரமாணம் செய்தார்.

கனகசுந்தரசுவாமி, கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி காலமானதால், அவரது இடத்துக்காக வடமாகாண சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு அடுத்த நிலையில் இருந்த தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் உறுப்பினரான சிவனேசன், தேர்தல் ஆணையாளரால் நியமிக்கப்பட்டார்.

புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கட்சியின் உறுப்பினர்கள்  ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .