2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

திருட்டு மின்சாரம் பெற்றவர்களுக்கு அபராதம்

Thipaan   / 2015 மே 09 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கட்டுவன் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற மூவருக்கு  தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், வெள்ளிக்கிழமை (08) தீர்ப்பளித்தார்.

தெல்லிப்பழை பொலிஸாரும் கொழும்பில் இருந்து வருகை தந்த மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து நடத்திய திடீர் சோதனை நடவடிக்கை, அண்மையில் கட்டுவன் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான மூவருக்கும் எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு வெள்ளிக்கிழமை (08) மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்;டது.

இதன் போது சந்தேக நபர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து நீதவான் மேற்படி தீர்ப்பளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .