Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2015 மே 10 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சிறந்த சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கங்களில் ஒன்றான தெல்லிப்பழை துர்க்காபுரம் மத்திய சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கத்தின் 16 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம், ஞாயிற்றுக்கிழமை (10) துர்க்காபுரம் தேவஸ்தான இல்லத்தில் சங்கத் தலைவர் ச.ஆறுமுகநாதன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினர்களாக யாழ். மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் க.கணேஸ், செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் தலைவர் ஆறுமுகநாதன் உரையாற்றுகையில்;, சங்கம் கடந்த 23 வருடங்களாக நல்ல முறையில் இயங்கி வருகின்றது. மாணவர்களை நல்ல முறையில் உருவாக்கும் வகையில் அவர்களுக்கான சேமிப்புத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன், பொதுப் பரிட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெறுபவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டத்தையும் செயற்படுத்தி வருகின்றது.
இளைய தலைமுறையினரின் ஆற்றலை நல்ல முறையில் வெளிக்கொண்டு வரும் வகையில் கலாசார நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி வருகின்றது.
அங்கத்தவர்களின் ஆற்றலை வெளிப்படுத்த விளையாட்டு போட்டிகள், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடன்களையும் வழங்கி வருகின்றது. அங்கத்தவர்கள் பூரணமாக ஒத்துழைப்பதன் மூலம் சங்கம் நல்ல நிலையில் தொடர்ந்தும் செயற்படக் கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago