2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மாடுகளை திருடி இறைச்சிக்கு வெட்டிய அறுவர் கைது

Suganthini Ratnam   / 2015 மே 11 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். இளவாலை பகுதியிலுள்ள மேய்ச்சல்தரவையில் மேயும் மாடுகளை திருடி இறைச்சிக்கு வெட்டியதாகக் கூறப்படும் அறுவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) கைதுசெய்ததாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் ஒருவரின் காணியில் மாடுகளின் எச்சங்களை சந்தேக நபர்கள் எறிந்துவிட்டுச் சென்றதை அடுத்து, அந்தக் காணியின் உரிமையாளர் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்தார்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம் எச்சங்கள் வீசியவர்களை கைதுசெய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது, திருடிய மாடுகளை இவர்கள் இறைச்சிக்கு வெட்டியமை தெரியவந்தது.

இந்த சந்தேக நபர்களிடமிருந்து 80 கிலோகிராம் இறைச்சி கைப்பற்றப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .