2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர்களை நியமிக்க கோரி மகஜர் கையளிப்பு

Sudharshini   / 2015 மே 11 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

மாதகல் நுணசை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கும்; ஆரம்பப்பிரிவுக்குமான ஆசிரியர்கள் இல்லையெனவும், ஆசிரியர்களை விரைந்து நியமிக்குமாறு கோரி வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராசாவிடம் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து திங்கட்கிழமை (11) மகஜர் ஒன்றை கையளித்தனர்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள், தங்களுக்கான ஆசிரியர்கள் இல்லாமையால் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்ததோடு, விரைந்து ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

மகஜரைப் பெற்றுக்கொண்ட வலயக் கல்விப் பணிப்பாளர், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) முதல் கணித, விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .