2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கதவை மூட மறந்தவர்கள் வீட்டில் கைவரிசை

Administrator   / 2015 மே 11 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியிலுள்ள வீடொன்றினுள் ஞாயிற்றுக்கிழமை(10) இரவு உள்நுழைந்து, அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் ஆகியன திருடப்பட்டுள்ளதாக உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிலிருந்த ஒருவர் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வரும் வேளையில் கதவை மூடாமல் சென்று நித்திரையில் ஆழ்ந்துள்ளார்.

மூடாத கதவு வழியாக உள்நுழைந்த திருடன் அலுமாரியின் வைக்கப்பட்டிருந்த 27 பவுண் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளான்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .