2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இணுவில் இந்துக் கல்லூரியின் நடை பவனி

George   / 2015 மே 11 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

இணுவில் இந்துக் கல்லூரியின்  150ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக பாடசாலை அதிபர் எஸ்.செல்வஸ்தான் தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து நடை பவனியொன்றை முன்னெடுத்தனர்.

மருதனார்மடம் சந்தியில் அமைந்துள்ள வைரவர் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட இந்த நடை பவனி, காங்கேசன்துறை வீதி வழியாக சென்று கந்தசுவாமி கோவில் சந்தியை அடைந்து அங்கிருந்து பாடசாலை வளாகத்தை சென்றடைந்தது.

நடைபவனியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட முன்னாள் பீடாதிபதி க.தேவராசா, வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், உடுவில் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .