2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'மண்டைதீவில் 25 ஏக்கர் காணி கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது'

Thipaan   / 2015 மே 11 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். மண்டைதீவுப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 25 ஏக்கர் காணி கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் அப்பகுதி மக்கள் கூறினர்.

திங்கட்கிழமை (11) மண்டைதீவுக்கு விஜயம் மேற்கொண்ட சிறிதரனிடமே மக்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

18 ஏக்கர் செம்மண் தோட்டக்காணியும் 7 ஏக்கர் கடற்கரை காணியும் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை கையகப்படுத்தவுள்ளதாக காணி உரிமையாளர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு காணி உரிமையாளர்கள் மறுப்புத் தெரிவித்து, காணிகளை மீட்டுத் தருமாறு வேலணை பிரதேச செயலாளரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இன்னமும் கடற்படையினர் அந்தக் காணிகளை விட்டுச் செல்லவில்லையென பொதுமக்கள் கூறினர். காணிகளை மீட்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிறிதரனிடம் மக்கள் கோரினர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .