2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திடீர் இடமாற்றம்

Thipaan   / 2015 மே 12 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுமித் சி பெரேரா தலைமன்னார் பொலிஸ் நிலையத்துக்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்கவின் பணிப்புரைக்கமைய திங்கட்கிழமை (11) நடைமுறைக்கு வரும் வகையில் இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு புதிய பொறுப்பதிகாரி நியமிக்கப்படும் வரை, காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் கடமையாற்றி திசாநாயக்க என்பவர் பதில் பொறுப்பதிகாரியாக கடமை புரிகின்றார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திடீர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .