2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இறுதிப்போரில் உயிரிழந்தவர்களுக்கு கீரிமலையில் பிதிர்க்கடன்

Menaka Mookandi   / 2015 மே 12 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இறுதிப்போரில் உயிரிழந்தவர்களுக்கு அவர்களது உறவினர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி, கீரிமலையில் பிதிர்க்கடன் செய்வதற்கான ஒழுங்குளை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.

யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கூறியதாவது,  

இறுதிப்போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் 2,000பேர் பிதிர்க்கடன்களைச் செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு கீரிமலையில் பிதிர்க்கடன் நிறைவேற்றல் நடைபெறும். அதன் பின்னர் நகுலேஸ்வரத்தில் யாகம் நடைபெற்று அதன் பின்னர் உருத்திராபிஷேகம் நடைபெற்று, மோச்ச தீபம் காட்டப்படும்.

பிதிர்க்கடன் நிறைவேற்றத் தேவையான சகல பொருட்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உறவினர்கள் தாங்கள் விரும்பினால் பொருட்களை கொண்டு வரலாம். அல்லது அங்கு கொடுக்கும் பொருட்களை பாவிக்கலாம்.

பிதிர்க்கடன்களை நிறைவேற்ற 3 சிவாச்சாரியர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்காக விசேட பஸ் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நேர ஒழுங்குகள் பின்னர் அறிவிக்கப்படும்.

இது அரசியல் சார்ந்த நிகழ்வோ அல்லது இராணுவத்தினரை சீண்டும் நிகழ்வோ இல்லை. இறந்த ஆன்மாக்களை ஆசுவாசப்படுத்துவதற்கான நிகழ்வு மாத்திரமே. அனைவரும் கட்சி பேதமின்றி பங்குபற்ற வேண்டும்.

கடந்த அரசாங்கம் இத்தகைய நிகழ்வை தடுத்தமையால் இன்று வீட்டுக்குச் சென்றுள்ளது. அந்தப் படிப்பினையை வைத்து இன்றைய அரசாங்கம் அவ்வாறு செய்யாது என நினைக்கின்றோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .