Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2015 மே 12 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பொய்யான குற்றச்சாட்டுக்களை தங்கள் மீது முன்வைக்கின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம் தெரிவித்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திலுள்ள கணித புள்ளிவிபரவியல் துறை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே விஞ்ஞான ஆசிரியர் சங்கம் இவ்வாறு கூறியது.
அவர்கள் தொடர்ந்து கூறுகையில்,
விஞ்ஞான ஆசிரியர் சங்கம் கையெழுத்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டி, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கடந்த 6ஆம் திகதி போராட்டம் ஒன்றை நடத்தியது. எமது சங்கம் முறைகேடாக நடந்துகொண்டதாக பத்திரிகைகளுக்கும் அறிக்கை கொடுத்துள்ளனர். அவர்கள் குறிப்பிட்டது போல் எதுவும் நடக்கவில்லை. ஆசிரியர் சங்கத்துடன் எமது சங்கம் சகோதரத்துவமான சங்கமாகவே இருந்து வருகின்றது.
எமது சங்கத்துடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தப்படாமல் ஆசிரியர் சங்கம் தன்னிச்சையாக போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. போராட்டத்தில் குறிப்பிடப்பட்டது போன்று கையெழுத்து மோசடிகள் இடம்பெறவில்லை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக பல அறிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம், பேரவை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு அனுப்பி வைத்திருந்தோம். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
புதிய அரசாங்கம் பதவியேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிய பேரவை அமைக்கப்பட்டதால் எம்மால் கடந்த காலங்களில் அனுப்பப்பட்ட அனைத்து அறிக்கைகளையும் ஒன்றாக தொகுக்கப்பட்டது. அந்தத் தொகுப்பு பல்கலைக்கழக நிர்வாகம், பேரவை மற்றும் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அந்தத் தொகுப்பின் முகவுரையில் எமது சங்கத்தால் கடந்த 2011ஆம் ஆண்டு தொடக்கம் முன்வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுகள் பக்கச்சார்பற்ற விதத்தில் விசாணை செய்யப்படவேண்டும். அவ்விசாரணைக்கு ஏதுவாக பல்கலைக்கழகத்துக்கு ஒரு தகுதி வாய்ந்த அதிகாரியை நியமிக்குமாறு கோரியிருந்தோம்.
அந்த கோரிக்கை கடிதத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்க தலைவரதும், செயலாளரதும் கையொப்பங்கள் உள்ளன. ஆதனை யாரும் பார்வையிடலாம். நாங்கள் மோசடியில் ஈடுபடவில்லை என்று கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago