2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

முதலமைச்சர் அலுவலகம் முன்பாக தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

George   / 2015 மே 13 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கான நிரந்தர ஆசிரியர் நியமனத்தை வழங்குமாறு கோரி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை (13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றும் சுமார் 150 ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

தங்களில் 43 பேர், 10 வருடங்களுக்கு மேலாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றுவதுடன், மிகுதிப் பேர், 5 தொடக்கம் 10 வருடங்கள் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றுகின்றனர்.

கிளிநொச்சியிலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தங்களை நியமனம் செய்யுமாறு கோரி அவர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .