2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பனை மரங்கள் தறித்த மூவர் கைது

Princiya Dixci   / 2015 மே 13 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டித்துறை இமையானன் பகுதியில் சட்டவிரோதமான முறையில் 02 பனை மரங்களை வெட்டிய 03 சந்தேகநபர்களை புதன்கிழமை (13) கைதுசெய்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரீ.எஸ்.மீடின் தெரிவித்தார்.

இமையாணன் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மூவர் பனைமரம் வெட்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார், அவர்களைக் கைது செய்தனர்.

கைதான மூவரும் உடுப்பிட்டி, சமரபாகு பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகின்றது.
அவர்களிடமிருந்து தறிக்கப்பட்ட பனை மரங்களையும் கைப்பற்றியதாக பொறுப்பதிகாரி கூறினார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தின் அடையாளம் எனக் கூறப்படும் பனை மரங்களை சட்டவிரோதமாக தறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சூழலியல் ஆய்வாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.

யுத்த காலத்தில் பெருமளவு பனை மரங்கள் அழிக்கப்பட்டு காவலரண்களாக மாற்றப்பட்டதுடன் இதர தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டன. ஷெல் வீச்சுக்களால் அழிக்கப்பட்டு தலையிழந்த நிலையில் பல பனைமரங்கள் இன்றும் இருக்கின்றன.

புதிய பனை மரங்களை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வந்தாலும் சட்டவிரோத பனை தறிப்பாளர்கள் தங்கள் நடவடிக்கையை கைவிடாமல் தொடர்வது கவலையளிப்பதாக குறித்த சூழலியல் ஆய்வாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .