2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மின்சாரம் தாக்கி பணியாளர் பலி

Thipaan   / 2015 மே 13 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.தபேந்திரன்

கரவெட்டி பிரதேச சபையில் மின் இணைப்பு வேலையில் ஈடுபட்ட பிரதேச சபை பணியாளர் ஒருவர், புதன்கிழமை (13) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரணவாய் தெற்குப் பகுதியை சேர்ந்த செல்லத்தம்பி சுதர்சன் (38) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பிரதேச சபையில் மின் இணைப்பு பணியாளராகக் கடமையாற்றி வரும் இவர், மின் இணைப்பு வேலைகளில் ஈடுபட்ட வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .