2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பகலில் வீடு உடைத்து கொள்ளை

Thipaan   / 2015 மே 13 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். இருபாலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (12) பிற்பகல் உள்நுழைந்து வீட்டிலிருந்த நகை, பணம் என சுமார் 5 இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன என்று வீட்டு உரிமையாளர் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிலிருந்தவர்கள், யாழ். நகரத்துக்கு பொருட்கள் கொள்வனவுக்காகச் சென்றிருந்த போது, சமையல் அறையின் ஜன்னல் கம்பிகளை வளைத்து வீட்டுக்குள் நுழைந்து, அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 7 ½ பவுண் நகை மற்றும் 1 இலட்சத்து 75 ஆயிரத்து 600 ரூபாய் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .