2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இராணுவ சிப்பாய்க்கு பிணை

Sudharshini   / 2015 மே 13 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். மல்லாகம் சந்தியில் செவ்வாய்க்கிழமை (12) வயோதிபர் ஒருவரை மோதிய இராணுவ வாகனத்தின் சாரதிக்கு 75 ஆயிரம் ரூபாய் ஆட்பிணையிலும் 5 ஆயிரம் ரூபாய் காசுப்பிணையிலும் செல்ல, மல்லாகம் மாவட்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் புதன்கிழமை (13) அனுமதியளித்தார்.

இதேவேளை, இந்த விபத்து தொடர்பான வழக்கை எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

அளவெட்டி கணேசபுரத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை பாலசுந்தரம் என்ற 54 வயது முதியவரே இந்த விபத்தில் படுகாயமடைந்தார்.

குறித்த வயோதிபரை மோதிவிட்டு இராணுவ வாகனம் நிற்காமல் தப்பிச் சென்றதையடுத்து, தெல்லிப்பளை பொலிஸாருக்கு பொதுமக்கள் விபத்துப்பற்றி அறிவித்தனர். பொலிஸார் மாவிட்டபுரம் சோதனை நிலையத்துக்கு தகவல் வழங்கியதையடுத்து, சோதனைச் சாவடியில் வைத்து, இராணுவப் பொலிஸாரால் சாரதி கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .