2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கட்டிளமைப்பருவ பிரச்சினைகள் தொடர்பில் ஆலோசனை

Sudharshini   / 2015 மே 13 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்டச் செயலக தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை பிரிவின் ஏற்பாட்டில் கட்டிளமைப் பருவத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆலோசனை வழங்கும் செயலமர்வு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் புதன்கிழமை (13) நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டச் செயலக தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை உத்தியோகத்தர் இ.செந்தூரன் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துரைகள் வழங்கினார். இந்த வருடத்திலிருந்து உயர்தரம் கற்கவுள்ள மாணவர்கள் 140 பேர் இந்த செயலமர்வில் கலந்துகொண்டனர்.

கட்டிளமைப் பருவத்தில் ஏற்படும் பிரச்சினைகள், அதற்கு முகங்கொடுப்பது, அவற்றுக்கான தீர்வை பெற்றுக்கொள்வது போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆலோசனை வழங்கப்பட்டது. பிரச்சினைகளை இலகுவாக கையாள்வதற்கான வழிமுறைகளும் இதன்போது கூறப்பட்டன.

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையில் இருந்து வருகை தந்த அதிகாரிகள் சிலர், உயர்தரத்தில் மாணவர்கள் பாடத் தெரிவுகளைச் செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் விளக்கமளித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .