2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

எழுவைதீவு கடற்கரை வீதி கையளிப்பு

Princiya Dixci   / 2015 மே 14 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எழுவைதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்கரை வீதியினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு புதன்கிழமை (13) கையளித்தார்.

எழுவைதீவு இறங்குதுறையிலிருந்து மக்களின் குடிமனைக்கு செல்லும் இக் கடற்கரை வீதியானது நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் இருந்து வந்தது.

இந்நிலையில், குறித்த வீதியினை போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் புனரமைப்புச் செய்து தருமாறு மக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 6.2 மில்லியன் ரூபாய் செலவில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின், பிரதேச செயலர் திருமதி எழிலரசி அன்ரன்யோகநாயகம், ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன், உபதவிசாளர் அல்பேட், பிரதேச சபை செயலாளர் சுதர்ஜன், யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .