Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 மே 14 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
பிரதேச சபைகளில் கீழுள்ள பொதுச்சுகாதார பரிசோதகர்களை சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். மாவட்டத்திலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கடந்த 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை குழப்பும் வகையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு அலைபேசியில் குறுந்தகவல் அனுப்பிய சுகாதார வைத்தியதிகாரி புதன்கிழமை (13) சுன்னாகம் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
நல்லூர், உடுவில், தெல்லிப்பளை மற்றும் சங்கானை ஆகிய பிரதேச சபைகளில் கீழ் பணியாற்றிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்.மாவட்டப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சுமார் 60 நாட்களுக்கு மேலாக பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுச்சுகாதார பரிசோதகர்களின் போராட்டத்தை குழப்பும் வகையில், வடமராட்சியை சேர்ந்த சுகாதார வைத்தியதிகாரியொருவர் அலைபேசி குறுந்தகவல் மூலம், போராட்டம் தேவையற்றது, அதனைக் கைவிடுமாறு கூறி குறுந்தகவலை அனுப்பியுள்ளார்.
இது தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் தொழிற்சங்கத் தலைவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணையை மேற்கொண்ட பொலிஸார், குறுந்தகவல் அனுப்பிய சுகாதார வைத்தியதிகாரியை இனங்கட்டு, புதன்கிழமை (13) அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை செய்தனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
5 minute ago
39 minute ago
2 hours ago