Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Gavitha / 2015 மே 16 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் கைதாகும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகும் சட்டத்தரணிகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியான போராட்டம் முன்னெடுக்கப்படும் என யாழ். பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளது.
புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி வித்தியா சிவலோகநாதன் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் வெள்ளிக்கிழமை (15) கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கண்டன போராட்டத்தின் முடிவிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான குற்றவாளிகளுக்காக ஆஜராகும் சட்டதரணிகள் குற்றவாளிகளை பிணையில் வெளியில் எடுத்தல் மற்றும் விடுதலையாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பாதிக்கப்படுகின்றனர்.
அவ்வாறு இல்லாமல் இவ்வாறான குற்றவாளிகளுக்காக எந்த சட்டத்தரணிகளும் ஆஜராகக்கூடாது என பல்கலைக்கழக சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வாறு ஆஜராகினால் அவர்களுக்கு எதிராக ஜனநாயக ரீதியான போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
16 minute ago