2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மயிலணி மோதல்: இருவர் பொலிஸில் சரண் இருவர் கைது

Thipaan   / 2015 மே 16 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் மயிலணி பகுதியில் இடம்பெற்ற குழு மோதலுடன் தொடர்புடைய  இருவர்  நீதிமன்று ஊடாக வெள்ளிக்கிழமை (15) சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் சனிக்கிழமை (16) தெரிவித்தனர்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புபட்டு தேடப்பட்டு வந்த இருவர் இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சனிக்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் (ஏப்ரல்) 27 ஆம் திகதி மயிலினி பகுதியில் இடம்பெற்ற மோதலில் இருவர் படுகாயம் அடைந்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் அறுவர் கைதாகி  எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை (15) தாங்களாகவே முன்வந்து சரணடைந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைதானவர்கள் இருவரும் உடுவில் பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் 13 நபர்கள் தொடர்புபட்டுள்ளதால், அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .