2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஆலயங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவு தின விசேட பூசைகள்

Gavitha   / 2015 மே 18 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவிலுள்ள ஆலயங்களில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளுக்கான விசேட பூசைகள் திங்கட்கிழமை (18) நடைபெற்றன.

மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில்,  வற்றாப்பளை கண்ணகையம்மன் ஆலயத்தில் மோட்ச தீபம் ஏற்றி விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு சிவன் ஆலயத்தில் மோட்ச தீபம் ஏற்றி பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து கருத்துக்கூறிய பிரதி அமைச்சர்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. பயந்து, ஒடுங்கி வீடுகளிலும் மறைவிடங்களிலும் அஞ்சலி செலுத்தினோம். பல்வேறு விதமான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டன. ஆனால் தற்போது அவ்வாறு இல்லாமல் சுதந்திரமாக அஞ்சலி செலுத்த முடிந்தது. 6 வருடங்களின் பின்னர் சுதந்திரமாக நினைவு தினத்தை அனுஷ்டிக்க முடிந்தது என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .