2025 ஜூலை 05, சனிக்கிழமை

பசு மாடுகளைக் கடத்தியவர்களுக்கு அபராதம்

George   / 2015 மே 21 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு சந்தியில் புதன்கிழமை (20) அனுமதிப்பத்திரமின்றி மூன்று பசு மாடுகளை கொண்டு சென்ற 3 பேருக்கு தலா 3,000 ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா உத்தரவிட்டார்.

அச்சுவேலியிலிருந்து வல்வெட்டித்துறைக்கு பசு மாடுகளைக் கடத்திச் செல்லும் போது, தொண்டைமானாறுச் சந்தியில் வீதிக்கடமையில் ஈடுபட்டிருந்த வல்வெட்டித்துறைப் பொலிஸார் பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.

இதனையடுத்து, சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .