2025 ஜூலை 05, சனிக்கிழமை

முதல் மூன்று சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2015 மே 21 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட சகோதரர்களான மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், வியாழக்கிழமை (21) உத்தரவிட்டார்.

இந்த மூன்று பேர் தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அங்கு அவர்களைக் கொண்டு செல்வதில் இருந்த பாதுகாப்பு பிரச்சினை தொடர்பில் சிறை அதிகாரிகள் ஊர்காவற்றுறை நீதிவானுக்கு தெரியப்படுத்தினர்.

இதனை ஏற்றுக்கொண்ட ஊர்காவற்றுறை நீதவான் இது தொடர்பில் யாழ்.நீதவான் நீதிமன்றத்துக்கு கட்டளை அனுப்பி யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதவானால் சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

கடந்த 13ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற மாணவி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சகோதரர்களான 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் இன்று வியாழக்கிழமை (21)  வரையில் விளக்கமறியில் வைக்கப்பட்டனர்.

இந்த படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 5 சந்தேகநபர்கள் புதன்கிழமை (20) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .