2025 ஜூலை 05, சனிக்கிழமை

'188 பிரேணைகளில் மூன்றுக்கு மட்டுமே பதில் கிடைத்தது'

George   / 2015 மே 21 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வடமாகாண சபையின் கடந்த 18 மாதகால அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட 188 பிரேரணைகளில் 3 பிரேரணைகளுக்கு மாத்திரம் பதில்கள் கிடைத்ததாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையில் வியாழக்கிழமை (21) நடைபெற்றது. இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கூறுகையில், பிரேரணைகள் நிறைவேற்றுவதால் எவ்வித பிரயோசனங்களும் இல்லை. பதிவு செய்யப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் அதிககூடிய கவனம் செலுத்த வேண்டும். பதில் கிடைத்த 3 பிரேiணைகளில் 2 பிரேரணைகளுக்கான பதில்கள் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் பெறப்பட்டது.

பிரேரணை நிறைவேற்றியதுடன் நின்றுவிடாமல் அது தொடர்பில் தொடர்ச்சியான நடவடிக்கைகளும் உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்றார்.

இதற்குப் பதிலளித்த பிரதி அவைத்தலைவர், இது உண்மையான விடயம். இது தொடர்பில் எதிர்காலத்தில் சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். நிறைவேற்றப்படும் பிரேரணைகள் தொடர்பில் அமைச்சுக்கள் மூலம் உரிய பதில்களை பெற்றுக்கொள்ள வேண்டும். இது தொடர்பில் அமைச்சர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .