2025 ஜூலை 05, சனிக்கிழமை

சனசமூக நிலையத்தில் திருட்டு

George   / 2015 மே 21 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கரவெட்டி, இராஜகிராமம் பகுதியிலுள்ள சனசமூக நிலையத்தில் இருந்த 27,000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் புதன்கிழமை (20) இரவு திருடப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

நிலையத்திலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, மின்விசிறி ஆகியனவே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

சனசமூக நிலையத்தின் கதவினை உடைத்து உள்நுழைந்து இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சனசமூக நிலைய நிர்வாகத்தினர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .