2025 ஜூலை 05, சனிக்கிழமை

வடமாகாண சட்டத்தரணிகள் நாளை பணிப்புறக்கணிப்பு?

George   / 2015 மே 21 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு முன்பாக புதன்கிழமை (20) கூடியவர்கள் நீதிமன்ற கட்டட கண்ணாடிகளை கல்லெறிந்து உடைத்த மற்றும் வளாகத்திலிருந்த வாகனங்களை சேதமாக்கி சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமாகாண நீதிமன்றங்களில் ஆஜராகும் சட்டத்தரணிகள் நாளை வெள்ளிக்கிழமை (22) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்தது.

யாழ். நீதிமன்ற கட்டடத்தில் இன்று வியாழக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சட்டத்தரணிகள் இவ்வாறு கூறினர். 

நேற்று புதன்கிழமை (20) நீதிமன்றத்துக்குள் உட்புகுந்து குழப்பம் விளைத்த குழுவொன்று நீதிமன்ற செயற்பாடுகளை இடையூறு விளைவித்ததுடன் நீதிமன்ற கட்டட கண்ணாடிகள் மற்றும் வாகனங்களின் கண்ணாடிகளையும் சேதமாக்கினர். இது ஒரு காட்டுமிராட்டித்தனமான செயலாகும்.

இதனைக் கண்டித்து, நாளை வெள்ளிக்கிழமை (22) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளோம். இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுக்கு வருந்துகின்றோம் என யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • R.KOGILARAJ Friday, 22 May 2015 09:39 AM

    Awargal seithadu kaattu mirandi thanamana seyal entral oru padasalai manaviyayai koduramaga kolai seitha awargal uththanargala....?????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .