Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 மே 22 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
நீதிமன்ற வளாகத்தில் கடந்த புதன்கிழமை (20) குழப்பம் விளைவித்தவர்களால் தாக்குதலுக்குள்ளான யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதியை பிரதம நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீபவன் வெள்ளிக்கிழமை (22) பார்வையிட்டார்.
நீதியரசருடன் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோனும் வந்திருந்தார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபர்கள் கடந்த புதன்கிழமை (20) நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படுகின்றனர் எனக்கருதிய சிலர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு, பொலிஸாரின் பாதுகாப்பு வேலியை உடைத்து உள்நுழைந்து நீதிமன்ற கட்டடத்தின் மீது கற்கள் கொண்டு வீசினர். நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த சட்டத்தரணியின் கார் உட்பட 3 வாகனங்களை அவர்கள் சேதமாக்கினர்.
இதனைக் கண்டித்து சட்டத்தரணிகள் வெள்ளிக்கிழமை (22) அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலைமைகளைப் பார்வையிடும் பொருட்டு, பிரதம நீதியரசர் யாழ்ப்பாணம் வருகை தந்து நிலைமைகளை பார்வையிட்டதுடன், யாழ்.நீதிமன்றத்தில் நின்றிருந்த நீதிபதிகள், சட்டத்தரணிகள் ஆகியோருடன் கலந்துரையாடி விடயங்களைப் அறிந்துகொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
42 minute ago
3 hours ago
5 hours ago