Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kogilavani / 2015 மே 22 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
யாழ்ப்பாணம், நீதிமன்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதான 129 பேருக்காக நீதிமன்றில் ஆஜராகுவது தொடர்பில் தாம் இன்னும் தீர்மானிக்கவில்லை என சட்டத்தரணிகள் சங்க தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான எம்.சிற்றம்பலம் தெரிவித்தார்.
வவுனியா, நீதிமன்ற வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
புங்குடுதீவு மாணவியின் படுகொலைக்கு நீதிகோரி யாழப்பாணத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது நீதி வழங்கக்கூடிய ஒரு இடம் தாக்குதலுக்குள்ளாகிள்ளது.
இச்சம்பவம், நீதிச்சேவை அடித்தளத்தை வீழ்த்திய ஒரு சம்பவமாகும். அதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். நீதித்துறையிலே நம்பிக்கை இல்லை என்ற தன்மையை அது ஏற்படுத்தியுள்ளது. எந்தவித ஐயமும் இல்லாமல் நீதியை வழக்கக் கூடிய ஒரு அமைப்பாக இலங்கையின் நீதித்துறை காணப்படுகிறது. நீதிமன்றத்தை தாக்குவதன் மூலம் நீதியை கோரியவர்கள் எதை அடைய நினைத்தார்களென எமக்கு தெரியவில்லை.
ஆனால், அவர்கள் நீதித்துறையின் மகத்துவத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளனர்;. அதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்நிலையில் இன்று யாழில் எமது சகோதர சட்டத்தரணிகள் மேற்கொள்ளும் பணிபுறக்கணிப்பில் நாமும் உணர்வுபூர்வமாக பங்குகொண்டு ஆதரவை வழங்குகின்றோம்.
இதன்போது, வித்தியா கொலை வழக்கில் நீதி எவ்வாறு நிலைநாட்டப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
'நாங்கள் விரும்பியவாறு எல்லாம் நீதி வழங்க வேண்டும் என கோருவது நியாயமில்லை. இலங்கை சட்டத்தின்படி நிச்சியமாக தண்டனை வழங்கப்படும். 'அவர்களை எம்மிடம் தாருங்கள். நாங்கள் நீதி வழங்குகின்றோம்' என கோருவதை நாம்; ஏற்றுக் கொள்ளவில்லை. அது காட்டுமிராண்டித்தனமானது. இலங்கை சட்டத்தின்படி அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியும் என்றால் விதிக்கப்படும். ஆயுள் தண்டனைதான் விதிக்க முடியும் என்றால் அதனைதான் வழங்க முடியும்.
நீதிமன்றை தாக்கிய குற்றச்சாட்டில் கைதானவர்களுக்காக ஆஜராக மாட்டோம் என நாம் தீர்மானம் எடுக்கவில்லை. ஒரு குற்றத்துக்காக ஆஜராக கூடாது என்று கூறினால் அதனுடன் தொடர்புடைய மற்றைய குற்றத்துக்கும் ஆஜராகாது விடுவது நியாயமானதும் தான்' என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
46 minute ago
3 hours ago
5 hours ago