2025 ஜூலை 05, சனிக்கிழமை

வழக்குகள் அனைத்தும் பிறிதொரு தினத்துக்கு மாற்றம்

Menaka Mookandi   / 2015 மே 22 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாண நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் வெள்ளிக்கிழமை (22) மேற்கொள்ளும் ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகள் அனைத்து பிறிதொரு தினத்துக்கு நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தால் மாற்றப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (20) நீதிமன்ற வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பம் விளைவித்த சிலர், நீதிமன்ற கண்ணாடிகளை உடைத்தும், வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியின் வாகனம் உட்பட 3 வாகனங்களை உடைத்தமையை கண்டித்து சட்டத்தரணிகள் இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

வடமாகாணத்திலுள்ள நீதிமன்றங்களில் ஆஜராகும் அனைத்து சட்டத்தரணிகளையும் இந்த பணிப்பகிஷ்கரிப்புக்கு யாழ்.மாவட்டச் சட்டத்தரணிகள் சங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சட்டத்தரணிகள் மேற்கொள்ளும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பால் நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்த முடியாத சூழ்நிலையேற்பட்டது.

இதனையடுத்து இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவிருந்து அனைத்து வழக்குகளும் பிறிதொரு தினத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .