2025 ஜூலை 05, சனிக்கிழமை

வேலணை யுவதியை காணவில்லை

Menaka Mookandi   / 2015 மே 22 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், வேலணை கிழக்கு, 4ஆம் வட்டாரத்தைச் சேர்;ந்த ராஜ்குமார் விமலினி (வயது 20) என்ற யுவதியை வியாழக்கிழமை (21) முதல் காணவில்லையென அவரது உறவினர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள நண்டு பதனிடும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இந்தச் யுவதி, வியாழக்கிழமை (21) காலை வேலைக்குச் சென்று, இதுவரையில் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து, உறவினர்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .