2025 ஜூலை 05, சனிக்கிழமை

யாழில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Sudharshini   / 2015 மே 23 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

மத்திய பஸ் நிலையத்தில் பெண்கள் விடுதலை சிந்தனை அமைப்பின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (23) நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு யாழ் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, யாழ் நகரப்பகுதிகளில் கவச வாகனங்கள் தரிக்கப்பட்டு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபர்கள் கடந்த புதன்கிழமை (20) நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் எனக்கருதிய சிலர் பொலிஸாரின் பாதுகாப்பு வேலியை உடைத்து உள்நுழைந்து நீதிமன்ற கட்டடத்தின் மீது கற்கள் கொண்டு வீசினர். 

இதன்போது, நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த சட்டத்தரணியின் கார் உட்பட 3 வாகனங்களும் சேதமாக்கப்பட்டது.

இதன்போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்யக் கோரியே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது.

இதேவேளை யாழ் நீதிமன்ற கட்டட வளாகத்தை சூழவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .