2025 ஜூலை 05, சனிக்கிழமை

முதியோர் வினாடி வினா போட்டி

Sudharshini   / 2015 மே 23 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.தபேந்திரன்

சமூக சேவைகள் அமைச்சின் முதியோர் தேசிய செயலகத்தினால் முதியோர் வினாடி வினா போட்டிகள் நடத்துவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சுவிந்த எஸ் சிங்கப்புலி தெரிவித்தார்.

இது தொடர்பான சுற்றுநிரூபம் மாவட்ட செயலாளர்கள் ஊடாகவும் மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஊடாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதேச செயலக பிரிவுகளில் வினாடி வினாப் போட்டிகள் நடத்தப்படும். அதில் தெரிவு செய்யப்படும் அணி மாவட்ட மட்டப் போட்டிகளுக்கு அனுப்பப்படும்.

மாவட்ட மட்டப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் இடத்தைப் பெறும் அணியின் பெயர் விபரம் மாகாண மட்டப் போட்டிக்காக மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளருக்கு அனுப்பப்படும்.

மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெறும் அணி செப்டெம்பர் மாதம் கொழும்பில் நடைபெற உள்ள தேசிய மட்டப் போட்டிக்கு அனுப்பப்படும். அங்கு முதல் 3 இடங்களைப் பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

சென்ற வருடம் கிளிநொச்சி மாவட்ட அணி தேசிய ரீதியில் ஆறாம் இடத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .