2025 ஜூலை 05, சனிக்கிழமை

புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 மே 23 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

புங்குடுதீவு மாணவி வித்தியா துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இந்தப் படுகொலைக்கு தாமதமின்றி நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும் 'பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பு, புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி ஆகியவற்றின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (23) காலை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று கொக்குவில் தேசிய கலை இலக்கியப் பேரவை அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் யாழ். பஸ் நிலைய பகுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆர்ப்பட்டங்ளை நடத்த யாழ். நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .