2025 ஜூலை 05, சனிக்கிழமை

தீவகப் பகுதிகளின் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பில் உரிய நடவடிக்கை: டக்ளஸ்

Thipaan   / 2015 மே 23 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், மண்டைதீவு உட்பட தீவகப் பகுதிகளில் குடிநீர் மற்றும் நீருக்கான தட்டுப்பாடுகள் நிலவுவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ள நிலையில், இப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உரிய, உடனடி நடவடிக்கையை மேற்கொள்வதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அப்பகுதி மக்கள், டக்ளஸிடம் தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

இப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருடனும், ஏனைய அதிகாரிகள் மற்றும் தரப்பினருடனும் தொடர்பு கொண்டு கலந்துரையாடி வருகின்றேன்.
 
யாழ். குடா நாட்டின் குடி நீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு நிரந்தரத் திட்டமாக நாம் இரணைமடு நீர்த் திட்டத்தை செயற்படுத்த சகல ஏற்பாடுகளும் செய்திருந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில அரசியல்வாதிகள், குறிப்பாக இதே தீவகப் பகுதி அரசியல்வாதி ஒருவர் உட்பட்டவர்கள், கடுமையான தடைகளைப் பிரயோகித்து அத் திட்டத்தை நிறுத்தச் செய்தனர்.

இந்த அரசியல்வாதிகள் தங்களது சுயலாப அரசியலைப் பார்த்தார்களே அன்றி, எமது மக்களின் குடி நீர்ப் பிரச்சினையைப் பற்றிப் பார்க்கவில்லை.

இந்த நிலையில், தற்போது குடி நீர்த் தட்டுப்பாடுகள் நிலவும் பகுதிகளுக்கு தற்காலிக ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பிலும், நிரந்தர ஏற்பாடுகளுக்கான பொறிமுறைகள் தொடர்பிலும் நாம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .