Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 25 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
- குணசேகரன் சுரேன்
யாழ். நீதிமன்ற வளாகம் மற்றும் நகரப் பகுதியில் கடந்த 20ஆம் திகதி குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 130 பேரில் ஒருவரான இந்திய சுற்றுலாப் பயணியை மீட்பதற்கான நடவடிக்;கைகளை மேற்கொண்டு வருவதாக யாழ். இந்திய துணைத்தூதரக அதிகாரியொருவர் திங்கட்கிழமை (25) கூறினார்.
புங்குடுதீவு மாணவி கொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி நீதிமன்றத்துக்கு முன்பாக ஒன்றுகூடியவர்களில் சிலர் நீதிமன்ற வளாகத்துக்குள் குழப்பம் விளைவித்து, நீதிமன்ற கண்ணாடிகளை உடைத்தும் வளாகத்தில் நின்றிருந்த வாகனங்களை உடைத்தும் அட்டகாசம் செய்தனர்.
குழப்பம் விளைவித்தவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைக்குண்டு பிரயோகித்து கலைத்து, சிலரைக் கைதுசெய்தனர். கலைந்து சென்றவர்கள் யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாகவிருந்த பொலிஸ் கண்காணிப்பகத்தை உடைத்தனர். இதனையடுத்து, பொலிஸார் யாழ்.நகரப் பகுதியை சுற்றிவளைத்து 130 பேரைக் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணத்தைச் சுற்றிப்பார்க்க வந்த இந்திய பிரஜை ஒருவரும் அடங்குகின்றார். யாழ். நகரப் பகுதியால் சென்ற அவரை குழப்பம் விளைவித்தவர்களுடன் சேர்த்து பொலிஸார் கைதுசெய்தனர். அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்திய சுற்றுலாப் பயணி குழப்பங்கள் எதுவும் விளைவிக்கவில்லையெனவும் அவர் யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்க்க வந்தவர் என்பதையும் இலங்கைக்கான இந்தியத் தூதரக அதிகாரிகள் மத்திய அரசாங்கத்துக்கு எடுத்துக்கூறியுள்ளனர். இந்நிலையில் இந்தியப் பிரஜை விடுவிக்கப்படுவார் என யாழ்.இந்தியத் துணைத்தூதரக அதிகாரி கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
51 minute ago
3 hours ago
5 hours ago