2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

விசாக மடைக்குச் செல்ல அனுமதி மறுப்பு

Menaka Mookandi   / 2015 ஜூன் 05 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள வசாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை (05) வைகாசி விசாக மடை உற்சவத்தை நடத்துவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு ஊடகவியலாளர்கள் சென்று புகைப்படம் எடுப்பதற்கு இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்துக்குச் செல்லும் பொதுமக்கள், வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்பாக பதிவுகளை மேற்கொண்ட பின்னர், இராணுவ பஸ்களில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதன்போது, அலைபேசி, கெமரா உள்ளிட்ட சாதனங்களை பொதுமக்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பகுதியிலிருந்து பொதுமக்கள் இடம்பெயர்ந்த பின்னர் உயர்பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்ட பின்னர் கடந்த 25 வருடங்களாக இந்த ஆலயத்துக்கு பொதுமக்கள் சென்று வழிபாடாற்றவில்லை.

இந்நிலையில் தற்போது இராணுவத்தினர் அனுமதி வழங்கியமையடுத்து, வெள்ளிக்கிழமை (02) அங்கு சென்று வைகாசி விசாக மடை உற்சவத்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X