2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கஞ்சா விற்பனையில் குடும்பத்தை ஈடுபடுத்தியவருக்கு 7 மாத கடூழிய சிறை

Administrator   / 2015 ஜூன் 05 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

கஞ்சா விற்பனையில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை உட்படுத்தி அவர்களையும் மனதளவில் பாதிப்படையச் செய்த பருத்தித்துறை கற்கோவளம் புனிதநகர் பகுதியைச் சேர்ந்த நபருக்கு 7 மாத கடூழியச் சிறைத்தண்டனை விதித்து பருத்தித்துறை நீதவான் மா.கணேசராசா வெள்ளிக்கிழமை (05) தீர்ப்பளித்தார்.

பருத்தித்துறை புனிதநகரிலுள்ள மதுபான நிலையத்துக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த 31 வயதுடைய பெண்ணொருவரை வியாழக்கிழமை (04) இரவு பருத்தித்துறை பொலிஸார் கைது செய்தனர்.

பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அவரையும் அவரது பிள்ளைகளையும் அவரது கணவர் கஞ்சா விற்பனையில்; ஈடுபடுத்தியுள்ளார் என்றும் பெண்ணின் கணவர் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்கின்றார் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, கணவனை கைது செய்த பொலிஸார், பருத்தித்துறை நீதிமன்றதில் ஆஜர்ப்படுத்தினர். இதன்போது நீதவான் சிறைத்தண்டனை விதித்ததுடன், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .