2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பொது மக்களுடன் வழிபாட்டில் ஈடுபட்ட படையினர்

Sudharshini   / 2015 ஜூன் 06 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள வசாவிளான் ஞானவைரவர் ஆலயத்தின் விசாக மடையில் வெள்ளிக்கிழமை (05) இராணுவத்தினரும் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

கடந்த 25 வருடங்களின் பின்னர், வெள்ளிக்கிழமை (05) உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள வசாவிளான் ஞான வைரவர் ஆலயத்தின் விசாக மடைக்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

இதனையடுத்து, வெள்ளிக்கிழமை (05) காலையில் வசாவிளான் மத்திய மகா வித்தியாலத்தில் ஒன்று கூடிய பொதுமக்களை இராணுவத்தினர் இராணுவ பஸ்ஸில் ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும், ஆலயத்துக்கு வருகைதந்திருந்த பக்தர்களுக்கு தேநீர், உணவு வகைகள் மற்றும் குளிர்பானங்களை வழங்கியதுடன் அடியார்களோடு இராணுவத்தினர் வழிபாடுகளிலும் அன்னதான நிகழ்விலும் கலந்து கொண்டிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .