2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நீதிமன்றினை அவமதித்த வாகன சாரதிக்கு அபராதம்

Thipaan   / 2015 ஜூன் 06 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றினை அவமதித்து பொய் கூறிய வாகன சாரதிக்கு 17,000 ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் மாவட்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், வெள்ளிக்கிழமை (05) தீர்ப்பளித்தார்.

போக்குவரத்து விதிமுறைகளினை மீறிய வாகன சாரதிக்கு எதிராக சுன்னாகம் போக்குவரத்து பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு வெள்ளிக்கிழமை (05) மாவட்;ட நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

மதுபோதையில் காப்புறுதி பத்திரம், சாரதி அனுமதிபத்திரம், வருமான வரிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்திய உடுவில் பகுதியினை சேர்ந்த நபரை சுன்னாகம் பொலிஸார், கடந்த 3ஆம் திகதி கைது செய்திருந்தனர்.

4ஆம் திகதி வழக்கு விசாரணையின் போது, அனைத்து ஆவணங்களும் தன்வசம் இருக்கிறது என கூறியதையடுத்து நீதவான் அவற்றை மன்றுக்கு காண்பிக்குமாறு உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்திருந்தார்.

வீட்டுக்கு சென்று எடுத்து வந்து காட்டுவதாக கூறியவர் மீண்டும் 5ஆம் திகதி வழக்கு விசாரணையின் போது அவற்றை காண்பிக்க தவறியிருந்தார்.

இதனையடுத்து நீதவான் நீதிமன்றினை அவமதித்த குற்றத்துக்காக 17,000 ரூபாய் அபராதம் விதித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .