Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூன் 08 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் சாவகச்சேரி மகளிர் கல்லூரிக்கு பின்புறத்திலுள்ள கற்குழி எனும் பகுதியில் இருந்து காயங்களுடன் ஆணொருவரின் சடலம், திங்கட்கிழமை (08) அதிகாலை மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர்.
கற்குழி பகுதியைச் சேர்ந்த சிவராசா தவக்குமார் (வயது 35) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
அதிகாலையில் பால் கொண்டு சென்ற ஒருவர் சடலத்தை கண்ணுற்று அவரது குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். சடலத்தில் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் கூறினர்.
மின்சார இணைப்புக்களை சீர்செய்யும் பணியை மேற்கொள்ளும் இவர், ஞாயிற்றுக்கிழமை (07) இரவு கட்டம் ஒன்றின் மின்சார இணைப்பு பணிகளை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியதாக கட்டப் பணியாளர்கள் கூறினர்.
சடலம், யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
13 minute ago
15 minute ago
22 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
15 minute ago
22 minute ago
28 minute ago