Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2015 ஜூன் 08 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளும் நோயாளிகள் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்குவதாக தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.
தெல்லிப்பழை நோயாளர் நலன்புரி சங்க வருடாந்த கூட்டம், புற்றுநோய் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்திய அத்தியட்சகர் எம்.உமாசங்கர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட வைத்திய நிபுணர் ஒருவரே மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இயங்கும் புற்றுநோய் வைத்தியசாலையென்பது வெறும் விடுதிகளை மட்டுமே தெல்லிப்பழையில் கொண்டுள்ளது. விசேட விடுதிகளை இங்கு அமைத்துவிட்டு அதனுடைய அனைத்து பரிசோதனைகளையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று நோயாளர்கள் செய்ய வேண்டியுள்ளது.
மருத்துவ ஆய்வு கூடம், இரத்த வங்கி மற்றும் கதிர்பட பிரிவு போன்ற அனைத்தும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இயங்குகின்றது. இவற்றை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையுடன் இணைக்கப்பட வேண்டிய தேவையும், அவசியமும் காணப்படுகின்றது.
இங்குள்ள நோயாளர்கள் எந்தவொரு பரிசோதனைக்காகவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டி மூலம் கொண்டு செல்லப்படவேண்டியுள்ளது. இதனால் நோயாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 3 அம்பியுலன்ஸ் வண்டிகள் மட்டுமே காணப்படுகின்றன. இதனை வைத்துக் கொண்டு புற்றுநோய் வைத்தியசாலை நோயாளர்கள் மற்றும் ஏனைய நோயாளர்களின் தேவைகளை நிறைவு செய்ய முடியாத நிலமையே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.
12 minute ago
14 minute ago
21 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
21 minute ago
27 minute ago