Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஜூன் 08 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி முட்கொம்பன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில்; அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு பெற்றோர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் 525 மாணவர்கள் கல்வி கற்று வருகின்ற இப்பாடசாலை, போதிய ஆளணி மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறைகளுடன் காணப்படுகின்றது.
இதனால், பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாடசாலையில் குறிப்பிட்ட சில வகுப்புக்;கள் தற்காலிக கொட்டகைகளில் இயங்கி வருவதுடன், மழை காலங்களில் அந்தக் கொட்டகைகள் ஒழுகுகின்றமையால் மாணவர்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கின்றனர்
இதுதொடர்பில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையிடம் வினவியபோது, நிதி கிடைக்கப்பெறும் அளவைக் கொண்டு தேவையுடைய அனைத்து பாடசாலைகளுக்கும் சமமாகப் பிரித்து பௌதீக வளங்களை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றது.
இதேவேளை ஆளணி பற்றாக்குறை பாட ரீதியில் காணப்படுகின்றது உண்மை. அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 minute ago
16 minute ago
23 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
16 minute ago
23 minute ago
29 minute ago