2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களுக்கு அபராதம்

Thipaan   / 2015 ஜூன் 10 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் ஆவணங்களின்றி மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற இருவருக்கு 30 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், செவ்வாய்க்கிழமை (09) தீர்ப்பளித்தார்.

புத்தூர் பகுதியை சேர்ந்தவருக்கு 19 ஆயிரம் ரூபாயும், சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்தவருக்கு 11,500 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

இவர்களை பொலிஸார் செவ்வாய்க்கிழமை (09) மறித்துச் சோதனை செய்த போது, இவர்கள் மதுபோதையில் இருந்ததுடன் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் இருக்கவில்லை.

இவர்களை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .